தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு ஆர்ப்பரித்து சென்ற மழைநீர் - ஆபத்தை உணராமல் சென்ற மக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சி செல்லும் சாலையின் குறுக்கே டொம்பச்சி ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. தொடர்மழையால் ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டோடும் நிலையில் தரைப்பாலத்தை மூழ்கடித்து சாலையின் மேல் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆனால் அந்த பாலத்தை கடந்து தான் நடுக்காட்டுப்பட்டி, வெள்ளை பூலாம்பட்டி, ஒத்தக்கடை, பழையகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து பெருக்கெடுத்து மழைநீர் ஓடும் நிலையில் மக்கள் அந்த பகுதியை கடந்து செல்லாமல் இருக்க போலீசார் சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடுப்புகளை சாலையோரம் வைத்துவிட்டு ஆபத்தை உணராமல் மக்கள் ஆர்ப்பறித்து செல்லும் நீரை கடந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் ஆபத்தை உணராமல் செல்லும் நிலை உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision