திருச்சி விஷன் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து நகர்புற வாக்காளர்களின் நாடித்துடிப்பை அறிய களஆய்வு

திருச்சி விஷன் பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து நகர்புற வாக்காளர்களின் நாடித்துடிப்பை அறிய களஆய்வு

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சியின் 65 வார்டுகள்,5 நகராட்சிகள் ,14 பேரூராட்சிகளில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19.02.2022  நடைபெற உள்ளது.வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள திருச்சி விஷன் பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்களும் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கீழ்கண்ட கூகுள் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்.

https://docs.google.com/forms/d/1jFm3szcHtK9pn_8zwCQ5WVLuyH4xVMhkgVUxA4BuebE/edit

மாநிலத் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட உடன் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்புடன் தங்களுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் மக்களின் மன ஓட்டங்களை அறிந்து கொள்ள திருச்சி விஷன் பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்களுடன் களத்தில் இறங்கியுள்ளது .ஒரு வார்டில் உள்ள உறுப்பினர் அப்பகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளையும் தெளிவாக நேரடியாக அவர்களிடம் கேட்டு பதிவு செய்து வருகிறது.

வாக்காளர்களாகிய அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கான தேவைகளை எண்ண ஓட்டங்களை அனைத்து வார்டுகளை விட தங்களது வார்டு முன்மாதிரியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வார்டு கவுன்சிலர் அவர்களை பாதுகாக்கும் கதாநாயகனாகவும் அடிப்படை வசதிகளை செய்து தரும் ஊழியனாகவும் மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க அவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் தற்போது உள்ள கணிப்பொறி காலத்தில் விரைவாக பணியாற்றி மக்களுக்கான சேவைகளை செய்ய தங்களது வார்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இதற்காக 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் களத்தில் இறங்கி வார்டில் உள்ள தெரு வாரியாக மக்களின் நாடித்துடிப்பை அறிய களம் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.வாக்காளர்கள் தங்களது கருத்துக்களை அவர்களிடம் தெரிவிக்க திருச்சி விஷன் கேட்டுகொள்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn