திருச்சியில் பெய்து வரும் மழை - களத்தில் இறங்கிய கிழக்கு தொகுதி எம்எல்ஏ
திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மாலை வேளைகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மணிகண்டம், மணப்பாறை, துவரங்குறிச்சி, லால்குடி, முசிறி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
Advertisement
இந்த நிலையில் இன்று திருச்சியில் தற்போது தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளை பகுதி செயலாளருடன் மாநகராட்சி அதிகாரி உடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் உடனடியாக மக்களுக்கு உதவ வேண்டும் என்றும், விழுந்துகிடந்த மரங்களை அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC