மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா பிரச்சாரம்!!

மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா பிரச்சாரம்!!

Advertisement

திருச்சி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது பேசிய அவர்..."திருச்சி எனக்கு சொந்த ஊர் அல்ல... ஆனால் திருச்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் அரங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், உறையூர் வெக்காளியம்மன், பரஞ்சோதி ஆகிய 4 பேரை பார்க்காமல் செல்லமாட்டேன். மலைக்கோட்டை மக்கள் காவிரி ஆற்றை போல பரந்த மனம் கொண்டவர்கள். நம்ம அடிமட்ட தொண்டர்கள் அதிமுக தலைமையை அலங்கரிக்க முடியும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசுதான். எனவே அதிமுகவுக்கு வாக்களியுங்கள்" என்றார். மேலும் உடன் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி இருந்தார்.