மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

மழைக்காலங்களில் மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க பொதுமக்கள் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், இழுவைகம்பிகள் அருகே செல்லக்கூடாது வீட்டில் மின் அதிர்ச்சி ஏற்பட்டால் ரப்பர் செருப்பை அணிந்து சுவிட்சை அணைத்த பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மரக்கிளைகளை வெட்டுவதற்கு முன் மின்வாரியத்திற்கு முறையாக தகவல் தெரிவித்து மின்பாதையில் மின்னூட்டம் நிறுத்தப்பட்ட பிறகு பணி செய்ய வேண்டும். 5 கிலோ வாட்டிற்கு மேல் மின் பளு இணைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளில் ELCB கட்டாயம் பொருத்தவேண்டும். 

தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்கவோ, நடக்கவோ கூடாது இடி மின்னலின் போது மின் கம்பிகள், மின் கம்பம், மரங்கள் போன்றவைகள் இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சம் அடைய வேண்டும். மேலும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மின் கம்பி அறுந்து கிடந்தால் அதை மிதிக்காமல் உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்கம்பங்களில் விளம்பரப் பலகைகளை பொருத்தக்கூடாது.

கனரக வாகனங்களை மின்கம்பி அருகிலோ அல்லது மின்மாற்றிகள் நிறுத்தி பொருட்களை ஏற்றக்கூடாது. மழை பெய்யும் போது திறந்த நிலையிலும் உள்ள ஜன்னல் கதவு அருகே நிற்க வேண்டாம். ஈரமான கைகளுடன் சுவிட்சிகளை இயக்குதல் கூடாது. மின் கம்பத்தில் கம்பியிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்கக் கூடாது. மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகள் இடையே கொடிகட்டி துணி காய வைக்க செயலை தவிர்க்கவும்.

திருச்சி நகரிய கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடை புகார்கள் மற்றும் அவசர உதவிக்கு 1912 மற்றும் 18004252912 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr