குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு

குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ளது. கலைஞர் நகர் பகுதியில், சுமார் 25 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த 40 வருடங்களாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பொது குடிநீர் குழாயினை அருகே உள்ள சிங்கிலிப்பட்டி சேர்ந்தவர் உடைத்து விட்டதாகவும், இதுகுறித்து கஞ்சநாயக்கன்பட்டி தலைவர் ஏதும் கேட்கவில்லை என்று புகார் கூறும் கலைஞர் நகர் பொதுமக்கள், தங்களுக்கு இருப்பது ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு வைக்கப்பட்டுள்ள இரண்டு தொட்டிகளில் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், அவை அப்பகுதி மக்களின்  குடிநீர் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தினரிடமும், ஒன்றிய ஆணையர் மற்றும் காவல்நிலையம், மாவட்ட ஆட்சியரகம் ஆகியற்றில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் என கூறுகின்றனர்.

மேலும் எங்களுடைய கடைசி போராட்டமாக குடிநீர் பிரச்சனையை தீர்க்காத ஊராட்சி நிர்வாகத்தினை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, தேர்தலை புறக்கணிப்பதாக ப்ளக்ஸ் பேனர் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU