திருச்சி மாநகரில் நடப்பு ஆண்டில் (2023) போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு 34 கோடி அபராதம் - மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகரில் நடப்பு ஆண்டில் (2023) போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு 34 கோடி அபராதம் - மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகரில் குற்ற செயல்களை தடுக்கவும், குற்ற செயல்களில் ஈடுபடுபவரை விரைந்து கண்டுபிடிக்கவும் மாநகர பகுதி முழுவதும் மொத்தம் 1,129 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதில் 710 கேமராக்கள் தற்போது வரை நல்ல முறையில் இயங்கி வருகிறது. தனியார் பங்களிப்பு உதவியுடன் பொருத்தப்பட்டுள்ள 419 கேமராக்கள் இயங்காமல் பழுதடைந்த நிலையில் உள்ளது அதனை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அபராதம் விதிக்கும் கருவிகள் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு 30, போக்குவரத்து ஒழுங்கு பிரிவிற்கு 17 என மொத்தம் 47 அபராதம் விதிக்கும் கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் (2023) மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராத தொகையாக 34 கோடியே 51 லட்சத்து 97 ஆயிரத்து 705 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 1208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன சோதனையின் போது போலீசார் பொதுமக்களிடம் பணிவுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், மது அருந்தியும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், அதிவேகமாகவும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது தனி கவனம் செலுத்தி

காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision