பால் தட்டுப்பாடு - காலி பால் புட்டியுடன் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு குறிப்பிட்ட நேரத்திற்கு பால் மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனை போக்கிட ஆவின் நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட வலியுறுத்தி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதி தலைவர் சோலை ராஜன் மாதர் சங்க பகுதி தலைவர் சாந்தா ஆகியோர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின், முன்னாள் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வெற்றி செல்வன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பொன்மகள், மாவட்ட செயலாளர் சேதுபதி,
மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ராகிலா, வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் நிவேதா ஆகியோர் பங்கேற்றனர் இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஏழுமலை நன்றியுரை கூறினார் ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் காலி பால் புட்டியுடன் நின்று கோஷம் எழுப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn