காவலர் குடியிருப்புகளை மாநகர காவல் ஆணையர் ஆய்வு
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இன்று (25.11.23)-ந்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாரந்திர கவாத்தை பார்வையிட்டும்இ காவல் ஆளிநர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், "அன்பான அனுமுறை” என்ற தலைப்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பயிற்சி
வழங்கபட உள்ளது எனவும், காவல் ஆளிநர்கள் தங்களது உடல்நலனில் அக்கறை கொண்டு மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். பின்னர் பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்புகளை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது குடியிருப்புகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசியும் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு காவலர் குடியிருப்பை சுற்றியுள்ள குப்பைகள், செடி கொடிகள் அகற்றப்பட்டன.
மேலும் திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து காவலர் குடியிருப்புகளையும் சுத்தம் மற்றும் சுகதாரத்துடன் வைத்துக் கொள்ளவும், பழுதடைந்த குடியிருப்புகளை சரிசெய்ய அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளபட்டு காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியமான வாழ்விற்கு நடவடிக்கைகள் தெடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision