தொழில்நுட்பங்களின் நேரடி செயல்முறை விளக்க கூட்டம் மற்றும் பண்ணை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

தொழில்நுட்பங்களின் நேரடி செயல்முறை விளக்க கூட்டம் மற்றும் பண்ணை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், கால்நடை நலக்கல்வி மையத்தின் அங்கமான, தொடக்க நிளை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் விரிவாக்கக் கல்வி இயக்குளாகம் இணைந்து ஏற்பாடு செய்த "கால்நடை பண்ணையாளர்களுக்கும் புத்தாக்கத்திற்குமான இணைப்பு"

தனுவாஸின் தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பின் மூலம் கண்டறியப்பட்ட புத்தாக்க தொழில்நுட்பங்களின் நோடி செயல்முறை விளக்க கூட்டம், (12.08.2024) அன்று, ஹோட்டல் கௌரி கிருஷ்ணா, தில்லை நகர், திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், முனைவர்சி.சௌந்தரராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர், தொடக்க நிலை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் இயக்குனர், கால்நடை நலக்கல்வி மையம், மரு 5 கணபதிமாறன் மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், M.சந்திவேல் இணை இயக்குனர், வேளாண்மைத்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், N.M.மோகன் கார்த்திக், மாவட்ட வளர்ச்சி அலுவலர், நபார்டு வங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், முனைவர் பிெ தாமஸ் பேராசிரியர்

தலைவர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சிராப்பள்ளி மற்றும் ஆர் வடிவேல், முதன்மை செயல் அலுவலர், தொடக்க நிலை தொழில் உருவாக்க மையம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியின் அமைப்பு செயலர் முனையர் சௌந்தரராஜன், தனது விழாத்தலைமையுரையில், கால்நடை பல்கலைக்கழகத்தில் பண்ணையாளர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும், அரசு வழங்கும் எண்ணற்ற திட்டங்கள் பற்றியும் பலதரப்பட்ட சேவைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மரு. 5. கணபதிமாறன் மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு துறை, தனது தொடக்க விழாப்பேருளாயில், கால்நடை பராமரிப்பு துறையும், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் பயன்தரும் முயற்சிகள் பற்றியும், கால்நடைகளை நோய்வராமல் பாதுகாத்தல் மற்றும் நடைமுறையில் உள்ள எளிமையான சிகிச்சை முறைகள் பற்றியும் எடுத்து கூறினார்.

M.சாதிவேல் இணை இயக்குனர், வேளாண்மைத்துறை அவர்கள் தமிழ்நாடு அரசின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை பற்றியும் அதனின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமாக விவரித்தார் N.M.மோக கார்த்திக், மாவட்ட வளர்ச்சி அலுவலர் நபார்டு வங்கி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் அவர்கள் தனது உரையில் நபார்டு வங்கி வழங்கிவரும் விவசாய தொழில் சார்ந்த பல கடன் வசதிகள் பற்றியும், தொடக்க நிலை மற்றும் சிறு, குறு நிறுவனங்களுக்கான புதிய திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவாரூத், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்ட பண்ணையாளர்கள், விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்ட H நபர்கள் பங்குபெற்று பயனடைந்தார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision