திருச்சி கல்லூரிகள் திரைப்படக் கலைஞர்களின் குத்தாட்ட கூடாரமாகும் அவலம்

திருச்சி கல்லூரிகள் திரைப்படக் கலைஞர்களின் குத்தாட்ட கூடாரமாகும் அவலம்

திருச்சியில் சமீப காலமாக திரைப்பட கலைஞர்களை அழைப்பதும் பிரம்மாண்டமாக விழா நடத்துவதும் அதில் மாணவர்களை உட்படுத்தி பந்தா காட்டுவதும் அரங்கேறி வருகிறது.

முக்கியமாக கடந்த ஆண்டில் கோப்ரா, ரத்தினம், தங்கலான், டிமாண்டி டு என்ற வரிசையில் முக்கிய கல்லூரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஹீரோ ஹீரோயின்களையும், இயக்குனர்களையும், துணை நடிகர்களையும் விமானத்தில் அழைத்து வந்து கல்லூரியை உண்டு இல்லை என பண்ண துவங்கி விட்டனர்.

அதில் என்ஐடி உள்ளிட்ட மிகப் பிரபலமான ஆண் பெண் கல்லூரிகளும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன. அந்த கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவாக திரைப்பட கலைத்துறை இருந்தால் அதற்காக பிரத்யேகமாக இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களை அழைத்து கலைதிறனை கற்று கொடுத்து ஊக்குவிப்பது தான் மாணவர்களின் கல்விக்கும் அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்.

இப்படி போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை திரைப்படத்தில் நடிப்பவர்களை அந்த திரைப்படம் வெளியிடுவதற்கு முன் நடிகர்களை கல்லூரிக்குள் இறக்கி முன்னோட்டம் காணுவதும் அதற்கு ஏகப்பட்ட லட்சங்களை செலவு செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. கல்லூரியில் கல்வி கற்பது என்பது இருந்த நிலை தற்போது கல்லூரிகள் திரைப்பட கலைஞர்களின் கூத்து அடிக்கும் கூடாரமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் கல்வியாளர்கள் உள்ளனர்.

திரைப்படத்தில் கூத்தாடும் கலைஞர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து அங்கேயும் ஒரு குத்தாட்டத்தை போட்டு அனைத்து கலாச்சார சீரழிவுகளும் நடத்தப்படுகிறது. மாணவர்களை தொழில்நுட்பத் திறனை வளர்ப்பதற்கு கலைதுறையில் பல்வேறு துறைகளில் மேம்படுத்த பலவிதமான பயனுள்ள வழிமுறைகள் இருக்கும் பொழுது ஏன் இவர்கள் இப்படி இறங்கிவிட்டனர் என ஓய்வு பெற்ற மூத்த பேராசிரியர்களும், ஆசிரியர்களும் முனு முனுப்பு நேரடியாகவே கேட்க முடிகிறது.

இந்த நிலை மாறுமா? மாணவர்களை திரைப்படத்துறையில் மகுடம் சூடம் வைக்க அறிவுத்திறனுடன் திறமை வளர்த்து தொழில்நுட்ப திறனில் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த இந்த ஆசிரியர்கள் முன் வருவார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பாரம்பரியமிக்க நூறு ஆண்டுகள் கடந்த கல்லூரிகளும் இந்நிகழ்வுகளை அரங்கேற்றுவது வருத்தமாக உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision