திருச்சி விமான நிலையத்தில் இனி பயணிகள் காத்திருக்க தேவையில்லை!!

திருச்சி விமான நிலையத்தில் இனி பயணிகள் காத்திருக்க தேவையில்லை!!

திருச்சி விமான நிலையத்தில் இன்லைன் பேக்கேஜ் கையாளும் அமைப்பு (In-line Baggege Handling System) தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பன்னாட்டு விமானம் அல்லது உள்நாட்டு விமான சேவை என எதில் பயணம் செய்வதாக இருந்தாலும்

பேக்கேஜ் எடுத்து சென்று அதற்கான ஸ்கேன்னேரில் கொடுத்துவிட்டு அதில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்பு, அதன்பின் தான் நாம் தேர்ந்தெடுத்த விமான சேவை நிறுவனத்திற்கு சென்று நம்முடைய உடைமைகளை கொடுத்து போர்டிங் பாஸ் பெற்று பயணிக்க முடியும்.

அங்கு சென்றபின் எடை அதிகம், அனுமதிக்கப்படாத பொருட்கள் இருக்கிறது என்பதை கண்டறிந்தால் மேற்கூறிய வழிமுறைகள் மறுபடியும் பின்பற்ற பட்டு அதன்பின்னே மீண்டும் போர்டிங் பாஸ் எடுப்பது என நடைமுறைகள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இன்லைன் பேக்கேஜ் கையாளும் அமைப்பினால் இந்த நடைமுறைகள், அதற்கான நேரம் குறையும்.

இந்த முறையின் மூலம் நேரிடையாக விமான சேவை நிறுவன கவுண்டரிடம் நம்முடைய உடைமைகளை கொடுத்துவிட்டால் அதனை ஆட்டோமேட்டிக்காக ஸ்கேன் செய்து, அனுமதிக்கப்படாத பொருட்கள் இருந்தால் அவர்களை மட்டும் தனியே அழைத்து மற்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மற்றவர்களின் உடைமைகள் நேரிடையாக விமானத்திற்கு அனுப்பப்படும்.

இதனால் வரிசையில் நின்று ஸ்கேன் செய்து காத்திருந்து பயணம் செல்ல வேண்டிய தேவையிருக்காது. இந்தியாவில் இந்த மாதிரியான வசதி உள்ள 12வது விமான நிலையம் திருச்சி விமான நிலையம் ஆகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision