"நம்மை நாமே பார்த்துக்கொள்வோம்" - உணவுகள் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய திருச்சி விஜய் ஹோம் ஃபுட்ஸ்!!

"நம்மை நாமே பார்த்துக்கொள்வோம்" - உணவுகள் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய திருச்சி விஜய் ஹோம் ஃபுட்ஸ்!!

Advertisement

மனிதன் போதும் என்று சொல்லும் ஒரு பொருள் உணவு மட்டும்தான். பசி முடிந்தபின் அது தேவைப்படுவதில்லை. ஆனால் இன்றைய நவீன யுகத்தில் பசியோடும், பட்டினியோடும் இருக்கும் பலரை தினம் தினம் கடந்து கொண்டு தான் வந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை உணவு கிடைத்து விடாதா என இன்னும் எத்தனையோ மனிதர்கள் இச்சமுதாயத்தில் இன்றளவும் வாழ்ந்து தான் வருகின்றனர் 

Advertisement

கடந்த குடியரசு தினவிழா அன்று, 1950 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற "நம்மை நாமே பார்த்துக் கொள்வோம்" என்ற அடிப்படைக் கருத்தை முன்வைத்து அப்போதைய தன்னார்வலர்கள் செயல்பட்டு வந்தன. அந்தவகையில் இந்த குடியரசு தினவிழாவில் நம்மை நாமே பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் நம்மோடு இருக்கும் ஆதரவற்றோரை பார்த்துக் கொள்ளும் விதமாக திருச்சியின் பல பகுதிகளில் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு திருச்சி விஜய் ஹோம் ஃபுட்ஸ் சார்பாக உணவு வழங்கி நெகிழ்ச்சியையும், அன்பையும் பரிமாறியுள்ளனர்.

திருச்சி துறையூர் பகுதியில் இயங்கிவரும் விஜய் டைரி நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பது தான் இந்த விஜய் ஹோம் ஃபுட்ஸ். குடியரசு தினவிழா அன்று ஆதரவற்றவர்களுக்கு உதவலாம் என சில தன்னார்வலர்கள் இந்த நிறுவனத்திடம் உதவி கேட்டுள்ளனர். உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நாங்கள் உதவுவதாகவும் அதற்குரிய உணவுப் பொருள்களை கொடுத்து அந்த தன்னார்வலர்கள் மூலமாகவே ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 

Advertisement

அந்தவகையில் குடியரசு தினவிழா அன்று திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பொன்மலை மற்றும் கிராப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலைகளில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் சுமார் 120 பேருக்கு தங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a