சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக நிர்வாகியால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்- பரபரப்பு

சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக நிர்வாகியால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்- பரபரப்பு

Advertisement

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் உடனிந்த சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று முன்தினம் கர்நாடக சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

Advertisement

சசிகலா விடுதலையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி அதிமுகவினரும் சசிகலா வருகையை எதிர்நோக்கி காத்திருந்தது போல பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியது அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே நெல்லை மற்றும் தூத்துக்குடியை தொடர்ந்து திருச்சியிலும் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டர்கள் காணப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி - வடக்கு மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் அந்தநல்லூர் ஒன்றிய மாவட்ட கவுன்சிலருமான புலியூர் இரா.அண்ணாதுரை அதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்று சசிகலாவை வரவேற்று திருச்சி மாநகர் மற்றும் ஸ்ரீரங்கம், அந்தநல்லூர், ஜீயபுரம், லால்குடி மண்ணச்சநல்லூர் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அதிமுகவினர் அனைவரும் சசிகலாவை வரவேற்க தயாராக உள்ளனர் என்பதையே சுவரொட்டிகள் காட்டுகிறது.

Advertisement