அதிமுக பிளவை விரும்பவில்லை ”ஜம்ப்” லிங்கம் ஆகிறாரா வைத்திலிங்கம் !?

அதிமுக பிளவை விரும்பவில்லை ”ஜம்ப்” லிங்கம் ஆகிறாரா வைத்திலிங்கம் !?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிமுக பெயரையோ, கட்சி கொடி மற்றும் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவுக்கு எதிராக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மேல்முறையீட்டுமனு செய்தனர். இந்த மனுமீதான விசாரணையில், உயர்நீதிமன்றம் பழனிச்சாமிக்கு ஆதரவாக உத்தரவிட்டுள்ளது.

பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் சிகிச்சையில் இருந்தார். அவர் நேற்று முந்தினம் சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில்,அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். ஆனால் ஆதரவாளர்கள் யாரும் கட்சிக் கொடியை பயன்படுத்தவில்லை. அதேபோல் பன்னீர்செல்வம் சென்ற காரிலும் அதிமுககொடி இல்லை. இதையடுத்து சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களான எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜே.சி.டி. பிர பாகர், பண்ருட்டி ராமச்சந்திரன் பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் பொழுது, அதிமுக அடையாளங்களை பயன்படுத்துவதில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையி பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறுகை யில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல் வம்தான். அதிமுக பொதுக்குழு, அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு இப்போது வரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு எங்களை கட்டுப்படுத்தாது. கட்சியில் எந்த பிளவும் இருக்க கூடாது என்பதில் பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார்" என்றார்.

இது குறித்து பன்னீர் செல்வத்துடன் பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதேநேரம், பன்னீர்செல்வம், அதிமுக கரைவேட் டியை கட்ட தகுதியில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரசாரமாக பேசி வருகிறார். இப்படி முன்னுக்கு பின் முரணான இந்த பேச்சுக்களால் அதிமுக தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்தியாவின் வடமாநிலங்களில் தீபாவளி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அதிமுகவுக்கும் புத்தாண்டாக பிறக்குமோ என்னமோ !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision