திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை வெற்றிகரமாக நடத்திட உதவிய இளைஞர்‌ அமைப்பினர்!

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை வெற்றிகரமாக நடத்திட உதவிய இளைஞர்‌ அமைப்பினர்!

கொரனோ நோய்த்தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு சில படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அதன்படி கோவில்கள் மற்றும் தற்போது திரையரங்குகள் வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement

அந்த வகையில் கடந்த 7 மாதங்களாக பண்டிகைகள் எதற்கும் அனுமதி வழங்காத நிலையில் தீபாவளி பண்டிகை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் திருச்சி மாவட்டம் கையாண்டது. அந்த வகையில் "நோ மாஸ்க் நோ என்ட்ரி" என்னும் முறையில் பெரிய கடைவீதியில் முகக்கவசம் அணியதவர்களுக்கு அனுமதி வழங்கப்படாதது முதல் சாலை போக்குவரத்தை சீர் செய்வது வரை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இதற்கு திருச்சியை சேர்ந்த அக்னி சிறகுகள் என்னும் அமைப்பின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தீபாவளி நேரத்தில் கடந்த 5 வருடங்களாக போக்குவரத்தை சீர் செய்வது, உதவி மையங்களின் பணி புரிவது போன்ற தன்னார்வ பணி செய்தது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் இந்த கொரோனா காலகட்டத்திலும் தொடர்ந்து 5வது ஆண்டாக அக்னி சிறகுகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த தீபாவளியை திருச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வெற்றிகரமாக ஒன்றிணைந்து பணிபுரிந்துள்ளனர். திருச்சி முக்கிய சாலைகளில் தீபாவளி நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அக்னி சிறகுகள் அமைப்பின் தன்னார்வலர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். தீபாவளி நேரத்தில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களில் பொது மக்களுக்கு தகவல் அளிக்கவும், அதுமட்டுமல்லாமல் உதவி மையங்களில் தன்னார்வலர் இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து உள்ளனர்.

இதுகுறித்து அக்னி சிறகுகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேந்திரனிடம் பேசினோம்... "எங்கள் அக்னி சிறகுகள் அமைப்பு சுமார் ஐந்து ஆண்டு காலமாக இந்த பணிகளை செய்து வருகின்றோம். திருச்சி மாநகர காவல் துறையுடன் இணைந்து இந்த தீபாவளி நேரத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக பொதுமக்களுக்கு உதவுவதாகவும் தொடர்ந்து இப்பணிகளை செய்து வருகின்றோம். என்றார்

Advertisement