நடிக்க வேண்டுமா? திருச்சியின் பிரபலங்களோடு இணைந்து பயிற்சி வகுப்புகள்!!

நடிக்க வேண்டுமா? திருச்சியின் பிரபலங்களோடு இணைந்து பயிற்சி வகுப்புகள்!!

நடிப்புக் கலை என்பது ஒரு மிகப்பெரிய கடல். அன்றைய வீதி நாடகங்கள் முதல் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வரும் திரைப்படங்கள், நாடகங்கள், வெள்ளித்திரை, சின்னத்திரை என அத்தனையிலும் மிகப்பெரிய பங்காற்றி வருவது என்றால் ஒருவருடைய நடிப்புதான். 

Advertisement

நடிப்பு மட்டும்தான் ஒருவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். அது நகைச்சுவையாகவும், படத்தில் ஹீரோவாகவும், கதாநாயகியாகவும், இயக்குனராகவும் என அனைத்தையும் உருவாக்க கூடிய ஒரு வல்லமை படைத்தது நடிப்பு மட்டுமே! தினமும் நடிப்பு ஒன்றை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தோன்றி மறைந்து வருகின்றனர். ஆனால் தன்னுடைய அசாத்திய திறமையால் மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர்.

Advertisement

கிடைக்கிற வாய்ப்பை வெற்றிகரமாக பயன்படுத்தி நம்ம ஊரு திருச்சியில் இருந்து சினிமா துறையில் சாதனை படைத்து வருபவர் இவர். டிக் டாக்கில் தொடங்கி தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையால் நடித்து வருபவர் கேபிரில்லா செல்யுஸ். தான் கடந்து சென்ற பாதையை நடிப்பு என்னும் திறமையை வைத்துக்கொண்டு வெளிக்கொணர வாய்ப்பு தேடுபவர்களுக்காக முக்கியமாக திருச்சி மக்களுக்காக வருகின்ற நவம்பர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை 10 நாட்கள் நடிப்புக்கலை பயிற்சியினை( ஆக்டிங் வொர்க் ஷாப்) திருச்சியில் வழங்க காத்திருக்கின்றனர்.

Karupazhagi Theatre Factory மற்றும் திருச்சி Blaze Event And Entertainments ஆகியோர் இணைந்து திருச்சியில் நடிப்புக் கலையில் ஆர்வமுள்ள மக்களுக்காக பத்து நாட்கள் நடிப்புக்கலை பயிற்சியினை வழங்கவுள்ளனர். இதில் தமிழ் சினிமாவின் தடம் பதித்த நம்ம ஊரு சாதனைப்பெண் கேபிரில்லா மற்றும் Blaze டான்ஸ் ஸ்டுடியோ நிர்வாக இயக்குனர், நடன ஆசிரியர் பிரசன்னா ஆகியோர் பயிற்சி வழங்க காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து Blaze டான்ஸ் ஸ்டுடியோ நிர்வாக இயக்குனர் பிரசன்னாவிடம் பேசினோம் " சென்னை போன்ற நகரங்களில் நடிப்புக் கலை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சியில் உள்ளவர்களுக்கு அங்கு சென்று பயில்வதற்கு பதிலாக இங்கேயே அவர்களுக்கு முதல் முறையாக நம்முடைய திருச்சியில் இந்த வாய்ப்பை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் இங்குள்ள திறமையாளர்கள் தங்களுடைய நடிப்புகளின் மூலம் வெளிவருவார்கள். இதில் திருச்சி மட்டுமல்லாது நாமக்கல் சேலம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து தற்போது வரை பலர் பதிவு செய்துள்ளனர். இதற்கு குறைந்த கட்டணமாக 10 நாட்களுக்கு 3000 மட்டுமே கட்டணமாக பெறுகிறோம். நடிப்புக் கலை பயிற்சி முடிந்த அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கவுள்ளோம்" என்றார்

 நடிப்புக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு திருச்சியிலேயே வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். இதில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமே என்றால் 99444 19357 மற்றும் 9884880914 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.