பிரதமருக்கு திருச்சி மீண்டும் திருப்பு முனையாக்குமா?

பிரதமருக்கு திருச்சி மீண்டும் திருப்பு முனையாக்குமா?

கடந்த ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று 10  ஆண்டுகள் நிறைவுறும் போது பிரதமராக மீண்டும் திருச்சிக்கு வருகை புரிந்தார். திருச்சியில் விமான நிலைய இரண்டாவது புதிய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்றது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை  தேர்தல் பரப்புரை முன்னதாக பிரதமர் சந்தித்தது தேர்தல் பணிகளில் பாஜக இறங்கி விட்டதாகவே பார்க்கப்படுகின்றது.கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கூட்டணி கட்சியினரை அழைத்து திருச்சி ஜி கார்னரில் பெரிய அளவில் தேர்தல் பரப்புரை கூட்டத்தை நடத்தினார்.

அதன் பிறகு தற்பொழுது பாரத பிரதமர் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சியில் முதல் அரசு நிகழ்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமாக பாராளுமன்றத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் வர உள்ள நிலையில் கூட்டணி அமைப்பதில் பாரதிய ஜனதா கட்சி மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதையடுத்து தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்த பொழுது அவரை 51 பேர் முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். அதில் அவருடைய கூட்டணி கட்சியினரின் சந்திப் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் ஓய்வறையில் பாரத பிரதமரை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன்,ஏசி சண்முகம் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் சந்தித்தனர் என்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. பிரதமர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இவர்களை சந்தித்து பேசி உள்ளார். மேலும் கூட்டணி வலுவானதாக அமைக்க பாமக, தேமுதிக கட்சிகளை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் பாஜகவுடன் இணைந்து ஆறு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருடன் இணைந்து ஓபிஎஸ் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாமக தேமுதிக நிலைப்பாடு இன்னும் அறிவிக்கவில்லை.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவர்கள் துக்க நிகழ்வில் இருப்பதால் பிரதமரை பார்க்க யாரும் வரவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பொழுது திருச்சிக்கு வந்து கூட்டத்தை நடத்திவிட்டு சென்று மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அனைத்து அரசியல் கட்சிகளும் திருச்சி தங்களுக்கு திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பார்கள். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திருப்புமுனை அரசியலை திருச்சி தரும் என்ற சொல்லை தொடர்ந்து பரப்புரையில் பேசி வருவார்கள். முக்கியமான மாநாடு தேர்தல் பரப்புரை தொடங்குவது திருச்சியில் வைப்பதை பழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் பிரதமர் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அதற்கு முன்பாக திருச்சியில் தங்களுடைய கூட்டணி கட்சித் தலைவர்களை பார்த்து தேர்தல் பரப்புரை தமிழ்நாட்டில் திருச்சியிலேயே தொடங்கிவிட்டர். கூட்டணி  கட்சித் தலைவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் பிரதமர் மோடிக்கு திருச்சி சென்டிமென்ட் திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கையில் அவரே உள்ளார் என்பது அவருடைய பேச்சிலே தெரிந்தது. தமிழகத்துக்கு வந்து சென்றால் தனக்கு ஒரு புது சக்தி பிறப்பதாக குறிப்பிட்டார்.  அதுவும் திருச்சிக்கு பிரதமராவதற்கு முன்னதாக வந்து சென்ற பிறகு அவர் தொடர்ந்து இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. பாராளுமன்ற தேர்தல் பரப்புரையை பாரதிய ஜனதா கட்சி திருச்சியிலேயே பிரதமரை வைத்து துவங்கி விட்டோம் என்று மார்தட்டி கொள்கின்றனர் பாஜகவினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision