மற்ற கட்சி எம்பிக்களை வெற்றி பெற வைத்து தேடும் நிலை - உள்ளூர் வேட்பாளரை திமுக நிறுத்துமா?
திருச்சி பாராளுமன்ற தொகுதி திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவரங்கம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது இதில் 15, 44, 742 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் புதுக்கோட்டையின் புதிய இரண்டு சட்டமன்றத் தொகுதி சேர்ந்த பின்பும், அதற்கு முன்பாகவும் மற்ற கட்சிகளை சார்ந்தவர்களை சமீப காலமாக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரசை சேர்ந்த அடைக்கல்ராஜ் தொடர்ந்து நான்கு முறையும் அதிமுகவை சேர்ந்த ப குமார் இரண்டு முறையும் உள்ளூர் வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.
மற்ற வேட்பாளர்கள் பல்வேறு கட்சியின் சார்பாக புதிதாக அறிவிக்கப்பட்டு களம் இறங்கி வெற்றி பெற்றவர்கள். திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்த அளவு அமைதியான தொகுதி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வாக்கு வெற்றியை தீர்மானிக்கும் என சொல்ல முடியாது. சில மாதங்களுக்கு முன்னதாக புதிய ஒரு வேட்பாளரை அறிவித்து அவரை வெற்றி பெற வைத்து வருகின்றனர் திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளர்கள். ஆனால் இந்த முறை திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நின்றால் எளிதாக வென்று விடலாம் என மூன்று பேர் போட்டி போட்டுள்ளனர் சீட் கேட்டுள்ளனர். ஒருவர் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் மற்றொருவர் புரட்சி புயல் வைகோ வாரிசு துரை வைகோ. இது மட்டுமில்லாமல் சினிமாவில் உலக நாயகனாக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆகியோரும் திருச்சியில் நின்றால் எளிதில் வெற்றி பெறலாம் என்று அரசியல் கணக்கு போட்டு வைத்துள்ளனர்.
திமுக கூட்டணி இடம் பெற்றுள்ள மதிமுக நாடாளுமன்ற தொகுதியில் நான்கு தொகுதிகள் கேட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மற்றும் திருச்சியில் போட்டியிட வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக திருச்சியில் மதிமுகவின் துரை வைககோவிற்க்கு அதிக வாய்ப்புள்ளதாக மதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. திருமாவளவன் தனது சொந்த தொகுதி சிதம்பரம் என சில நாட்களுக்கு முன் திருச்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிதம்பரம் மீண்டும் அவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகத்தை தற்போது நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் தெரிய வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். கமலஹாசனை பொறுத்த அளவு கோயம்புத்தூர் வடசென்னை கேட்கும் நிலையில் திருச்சியையும் ஒரு ஆப்ஷனாக வைத்துள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நின்றால் எளிதில் வென்று விடலாம் திருச்சியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு 4 அமைச்சர்கள் தொகுதிக்கு உட்பட்டு உள்ளனர். ஆகவே நான்கு அமைச்சர்கள் ஒரு பாராளுமன்ற தொகுதியை வெற்றி பெற வைப்பது மிக எளிது என்ற கணக்கு இங்கே கேட்கும் வேட்பாளர்கள் இடையே எண்ண ஓட்டமாக உள்ளது. கடந்த காலங்களை பொறுத்த அளவு வந்தாரை வாழ வைக்கும் மலைக்கோட்டை பாராளுமன்ற தொகுதி இந்த முறை உள்ளூர் பிரமுகரை திமுக சார்பாக நிறுத்தினால் வெற்றி பெறுவது உறுதி. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் இங்கு வெற்றி பெறும் வேட்பாளர்கள் திருச்சிக்கு வெற்றி பெற்ற பிறகு வருவதில்லை. வெளியூர் வேட்பாளர்களை கொண்டு வந்து நிறுத்தி வெற்றி பெற வைத்து எந்த முன்னேற்றமும் காணாமல் திருச்சி பாராளுமன்ற தொகுதி உள்ளதாக இப்பகுதி வாக்காளர்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். உள்ளூர் வேட்பாளர் வெற்றி பெற்றால் தங்களது குறைகளை தீர்ப்பதற்கும் புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ஏதுவாக இருக்கும் என வாக்காளர்களுக்குள் பேசப்பட்டு வருகிறது. இந்த முறை திருச்சி பாராளுமன்ற தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முக்கியமாக இதுவரை திருச்சி மேயரும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. திமுக இந்த முறை தனது கட்சி வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்று அன்பழகனை மேயராக அமர வைத்து உள்ளது. அதேபோல் திருச்சி பாராளுமன்ற தொகுதியும் உள்ளூர் வேட்பாளரை திமுக நிறுத்தினால் வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதும் திருச்சி பாராளுமன்ற மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கவும் ஏதுவாக இருக்கும் ஏன் ஒவ்வொரு முறையும் வேறு வேட்பாளர்கள் நிறுத்தி வெற்றி பெற செய்து அந்த எம்பியை தேட வேண்டிய நிலைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்கிறது என்பது திமுக உடன்பிறப்புகள், வாக்காளர்களின் ஆதங்க குரலாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision