153 போலி சோனி டிவிகள் பறிமுதல் - 3 பேர் கைது!

153 போலி சோனி டிவிகள் பறிமுதல் - 3 பேர் கைது!

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் பீமநகர் ஓல்டு போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் குறைந்த விலைக்கு பிரபல கம்பெனி 32 இன்ச் டிவி ஒன்றை 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

Advertisement

அதற்கான பில் வழங்கப்படவில்லை. வீட்டிற்கு சென்று டிவி ஆன் செய்தபோது டிவி ஆன் ஆகவில்லை. இதுகுறித்து அந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் சென்று கேட்டபொழுது இது தங்களுடைய கம்பெனி டிவி அல்ல என்று அவர்கள் கூறியதை அடுத்து, பாலக்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நிறுவனத்தில் இருந்த அனைத்து டிவிக்களும் போலி ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டி விற்கப்படுவது தெரியவந்தது.

Advertisement

இதனை தொடர்ந்து அங்கிருந்த 153 டிவி க்களை பறிமுதல் செய்த போலீசார், பீமநகர் கண்டிதெருவை சேர்ந்த நிஜாமுதீன்(30), முகமது பைசல்(21), பெட்டவாய்த்தலையை சேர்ந்த சரவணன்(23) ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.