திருச்சியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - தத்தளித்து செல்லும் வாகனங்கள்

திருச்சியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - தத்தளித்து செல்லும் வாகனங்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு பச்சைமலையில் பெய்த மழைக்கு பெருமாள்பாளையம் செங்காட்டுப்பட்டி மருவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது தெருக்களில் ஆறு போல் ஓடுகிறது.

இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து உள்ளனர். நீர் வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால் தண்ணீர் உள்ளே புகுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுபோல் துறையூர் பெரிய ஏரி கடந்த சில நாட்களாகவே வழிந்து வருகிறது. தண்ணீர் வரத்து அதிகமானதால் ஊருக்குள் தண்ணீர் புகாமல் மணல் மூட்டை வைத்து நகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை செய்து வருகிறது.

துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், வட்டாட்சியர் புஷ்பராணி நேரில் சென்று ஆய்வு செய்தார். துறையூர் பாலக்கரை பகுதியில் தெப்பகுளம் வழிந்து இரண்டு வீடுகளில் வெள்ளநீர் உள்ளே புகுந்தது வீடு முன்பதிவு வழியாக தண்ணீர் வருகிறது. துறையூர் ராஜா காலனி பகுதியில் சுமார் 10 வீட்டுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் அவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

துறையூர் தெப்பக்குளம் வழிந்து வருவதால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. தெப்பக்குளம் பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்ன பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரிகார்ட் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO