காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்? - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபநீர் வெளியேற்றப்பட்ட வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 37,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் காவிரியில் 42 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 95 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் காவிரி கரையோரப் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூரில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அது நாளை மாலை திருச்சி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை இரண்டு லட்சத்து 37,000 கன அடி நீர் வந்தது. தற்பொழுது இரண்டு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால் பயப்படத் தேவையில்லை. திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் 59 இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த குழு வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் இடங்களுக்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
60 ஆயிரம் மணல் முட்டைகள் தயாராக உள்ளன. காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு அதிகளவு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO