மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்.

மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்.

திருச்சி அரசு  மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய பயிற்சி காலம் முடிவடைந்து விட்டது. கோவிட்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஆனால்  தமிழக அரசு தற்போது ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை எடுத்து அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கி வருகிறது. எங்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கி எங்களை அப்பணியில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பாக முதுநிலை பயிற்சி மருத்துவ மாணவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி அதில் தங்களுக்கு நீதி வேண்டும் என்ற வாசகங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது முதுநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு  உதவி தொகையாக ரூபாய் 40 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒப்பந்த அடிப்படையில் தற்போது பணிபுரியும் மருத்துவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் முதுநிலை மருத்துவர்களும் தற்போது சிகிச்சை அளிக்காமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC