இன்று 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருச்சி மாநகராட்சி - "திருச்சி தினமாக" அறிவிக்க மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை

இன்று 27வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திருச்சி மாநகராட்சி - "திருச்சி தினமாக" அறிவிக்க மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை

திருச்சி என்றால் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு ஊர். வந்தாரை வாழவைக்கும் நம்முடைய திருச்சி. தமிழகத்தின் இதயமாக இருந்து தென் மாவட்டங்களையும் வடக்கு மாவட்டங்களில் இணைக்கும் பாலமாக இருப்பது நம்முடைய திருச்சி. இன்றைய அரசியல் களத்தின் திருப்புமுனை நகரம் திருச்சி. காவிரிக்கரையில் அழகாய் மின்னும் நகரம் திருச்சி. 

Advertisement

ஆம்! இது நம்ம திருச்சி, இன்றுடன் (ஜூன்-1) திருச்சி மாநகராட்சி உருவாகி 27-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூன் 1ம் தேதியான இன்று திருச்சி மாநகராட்சி உருவாக்கி 26 ஆண்டுகள் முடிந்து 27வது ஆண்டில் இன்றுடன் அடியெடுத்து வைக்கிறது.

இதனை மறவாது கொண்டாடும் வகையில் Shine TREEchy அமைப்பினர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் இத்தகைய தினத்தை நாம் தலைமுறைகளுக்கு தெரியும் வண்ணம் நான் திருச்சி மாநகராட்சி "திருச்சி தினம்" என்று அறிவித்து மேலும் இந்த திருச்சி தினத்தை கொண்டாட நம் திருச்சி மாநகராட்சியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மேலும் நம் திருச்சியில் இருக்கும் பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களை வைத்து இக்கட்டான சூழ்நிலையில் ஆன்லைன் முறையில் சிறப்பிக்கும் வண்ணம் திருச்சியை பற்றியும் மேலும் திருச்சியை சுற்றி உள்ள சிறப்புமிக்க தலங்கள் பற்றியும், சிறப்பாக ஆன்லைன் முறையில் எழுத்துப் போட்டி, நடனப்போட்டி, மேலும் பல்வேறு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வேண்டும் என்றும்

நாம் திருச்சியில் உள்ள மக்களிடம் நான் திருச்சி மாநகராட்சியின் சிறப்பினைப் பற்றி கேட்டறிந்து சிறப்பாக இந்த திருச்சி தினத்தைக் கொண்டாட வேண்டும் எனவும் இதன் மூலம் திருச்சி மாநகரம் திருச்சி தினம் என்று நடத்தி மற்ற மாநகராட்சியை விட முன் நகரமாய் திகழ வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு Shine TREEchy அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC