"கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

"கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

Advertisement

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் உள்ள கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார். தொடர்ந்து கோவிட் தடுப்பூசி ஏற்றபட்ட வாகனங்களில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கோவிட் தடுப்பூசியை கொடியசைத்து அனுப்பி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்... "16ம் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு வெளியிட்டுள்ளது.16ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தடுப்பூசி போட்டு தொடங்கி வைக்கிறார்.

Advertisement

தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி உள்ளது. முதல்கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்தில் 68,800 தடுப்பூசி புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வந்துள்ளது. இந்த மாவட்டங்களில் 307 இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

Advertisement

தடுப்பூசி போட்ட உடன் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் நினைத்து விட வேண்டாம். முதல் ஊசி போட்ட பின்பு 28வது நாளில் 2வது ஊசி போட வேண்டும். 42 வது நாளுக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மது உடல் நலத்திற்கு கேடானது. மது அருந்தியவர்கள் கோவிட் தடுப்பூசி பயன்படுத்தக்கூடாது.

எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டில் 10 சதவீதம் இருந்த பாஸிட்டிவ் தற்போது 1.2 சதவீதம் குறைந்து உள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 4 பேருக்கு தான் பாசிட்டிவ் வந்துவிடுகிறது. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.சமூக வலைகளில் தவறாக பரப்புவார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.