திருச்சி சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் அனுமதியில்லை - ஆட்சியர்

திருச்சி சுற்றுலா தலங்களுக்கு 3 நாட்கள் அனுமதியில்லை - ஆட்சியர்

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்ல‌ என மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.இந்நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் வண்ணத்துப்பூச்சி பூங்கா,முக்கொம்பு மற்றும் புளியஞ்சோலை உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடும் என்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

Advertisement

இதனை கருத்தில் கொண்டுவருகிற 15,16,17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.