ஸ்ரீரங்கத்தில் போலி தங்க நாணயங்களை காட்டி நகைகளை பட்டபகலில் வழிப்பறி செய்த பெண் கொள்ளையர்கள்

ஸ்ரீரங்கத்தில்  போலி தங்க நாணயங்களை காட்டி  நகைகளை பட்டபகலில் வழிப்பறி செய்த பெண் கொள்ளையர்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் மாணிக்கம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் சந்திரா. இவர் 6ம் தேதி காலை ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் அங்கு வந்த இரண்டு பெண்கள் தங்க நாணயங்களை கையில் கொடுத்து இது தங்கம் தானா என பரிசோதித்து கூறுங்கள் என சந்திராவிடம் பேசிக்கொடுத்துள்ளனர்.

Advertisement

சந்திராவை மூளைசலவை செய்து தங்களிடமிருந்த போலி தங்க நாணயங்களை கொடுத்து

சமயம் பார்த்து அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் போலி தங்க நாணயத்தை காட்டி பெண்கள் வழிப்பறி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement