திருச்சி காவிரி ஆற்றில் முதலை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
திருச்சி காவிரி ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலை நடமாட்டம் இருந்து வந்தது. இதுப்பற்றி தகவலறிந்த வனத்துறையினர் ஆற்றில் சென்று முதலை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் இப்பகுதியில், பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் ஓரளவு தண்ணீர் ஓடுகிறது. தற்பொழுது திருச்சி மலைக்கோட்டையில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காவிரி ஆற்றுப்பாலத்தின் அடிப்பகுதியில் சிந்தாமணி படித்துறையில் அப்பகுதியை உள்ளவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள மணல் திட்டில் ஒரு முதலை இருந்ததை பார்த்துள்ளனர். உடனே செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதனால், காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு சிந்தாமணி பகுதியில் முதலை நடமாட்டம் இருந்து வந்த நிலையில், மீண்டும் பெரிய முதலை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision