அடுத்த 10 நாட்களுக்கு திருச்சி மக்களே உசார்...!

அடுத்த 10 நாட்களுக்கு திருச்சி மக்களே உசார்...!

வரலாறு காணாத வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் தற்போது மிகவும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது - இதனால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் நேற்று 113 டிகிரி ஃபாரண் நீட் அளவிற்கு வெப்பம் பதிவானது. இதே போல் 13க்கும் அதிகமான மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவானது. திருச்சி மாநகரை பொருத்தவரை பல்வேறு இடங்களில் 12:00 மணி முதல் 4:00 மணி வரை மிகக் கடுமையான வெயில் நிலவியது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களின் சென்றவர்கள் கடுமையான வெப்பத்தில் சிக்கினார்.

திருச்சியில் நேற்று 43.1 டிகிரி செல்சியஸ் வரை அதாவது 109.5 டிகிரி ஃபான்ஹீட் அளவிற்கு வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களது பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் 11:00 மணி முதல் 04:00 மணி வரை வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் போன்றவர்களை வெளியில் கொண்டுவர கூடாது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பத்தின் தாக்கம் உயர்ந்து கடுமையான வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.