பழிக்கு பழி திருச்சியில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை சம்பவம் 6 பேர் கைது

பழிக்கு பழி  திருச்சியில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை சம்பவம்  6 பேர் கைது

திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கண்ணன் (35) இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்திதனம்(09.05.2021 தனது குழந்தைக்கு சைக்கிள் கற்றுக் கொடுப்பதற்காக பீமநகர் சாலையில் சென்று கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

தகவலறிந்து வந்த 
 கண்டோன்மெண்ட் போலீசார் கோபிகண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹேமத்குமார் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோபி கண்ணன்  செயல்பட்டதாகவும் அந்த முன்விரோதம் காரணமாக ஹோமத்குமார்
தரப்பினர் கொல்லப்பட்டிருக்கலாம் என கன்டோன்மென்ட் காவல் உதவிஆணையர் தலைமையிலான இரண்டு தனிப்படையினர் தீவிரமாக கொலையாளிகளைை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஹேமந்த் குமாரின் தம்பி பிரதீப் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஹேமந்த் குமார் கொலை வழக்கில் கோபி கண்ணன் முதல் குற்றவாளியாக இருந்துள்ளார் அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் தற்பொழுது ஹேமந்த்குமார் இன் தம்பி பிரதீப் தலைமையிலான 6 பேர் வரை வெட்டிக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது .பழிக்கு பழி நடந்த இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd