ரெம்டெசிவர் மருந்து 6 மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் - மாவட்ட நிர்வாகம்

ரெம்டெசிவர் மருந்து  6 மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் - மாவட்ட நிர்வாகம்
ரெம்டெசிவர் மருந்து வாங்க 36 மணி நேரம் காத்திருந்து சாலையிலேயே படுத்து உறங்கும் நிலையில் 3ம் நாள் துயரம்...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இயன்முறை சிகிச்சை பயிற்சி கல்லூரி  ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படுகிறது. மூன்றாவது நாளான இன்று 24 மணி நேரத்துக்கு மேலாக 500க்கும் மேற்பட்டோர் ரெம்டெசிவர் மருந்தை வாங்க காத்திருந்தனர். திருச்சி மாவட்டத்திற்கு சராசரியாக நாளொன்றுக்கு 300 குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து மட்டுமே வருவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாமல் நாகப்பட்டினம் ,திருவாரூர் ,விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்   மருந்தை வாங்க சாலையிலே படுத்து உறங்கியும் கார்களில் காத்திருந்து உணவு பொட்டலங்களை வைத்துக்கொண்டும் காத்திருக்கின்றனர்.

 300 குப்பி  மருந்து 50 அல்லது 100 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 
மீதமுள்ளவர்கள் அங்கேயே அடுத்த நாள் மருந்து கிடைக்கும் வரை சாலையிலேயே தங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மருந்தின் பயன்பாடு அதிகமாகி உள்ளதால் தமிழக அரசிடம் கூடுதலாக ரெம்டெசிவர் கேட்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காலை 10 மணி முதல் 4 மணி வரை மட்டுமே மருந்து வழங்கப்படுகிறது ஞாயிற்று கிழமையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரத்தை அதிகப்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து கிடைக்கவும் வழி செய்ய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி இயன்முறை சிகிச்சை பயிற்சி கல்லூரியில்  தற்போது திருச்சி, பெரம்பலூர் அரியலூர் ,கரூர், தஞ்சாவூர் ,திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd