ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய புதிய கட்டணம்- இன்று முதல் அமல்

ஸ்ரீரங்கம் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்ய புதிய கட்டணம்- இன்று முதல் அமல்

     ஸ்ரீரங்கம்  கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வசதிக்காகவும்விரைவாக தரிசனம் மேற்கொள்வதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும். இத்திருக்கோயிலின் பெரிய சன்னதியில் நடைமுறையில் இருந்த விரைவு தரிசன வழி கட்டணச் சீட்டு ரூ.250 மற்றும் சிறப்பு வழி கட்டணச் சீட்டு ரூ.50/- ஆகிய இரு கட்டணச் சீட்டுகளை இரத்து செய்து மாற்றாக இன்று 01.03.2022 முதல் ரூ.100 மதிப்புள்ள ஒரே விரைவு தரிசன கட்டணச் சீட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

மேலும், இன்று (01.03.2022) முதல் சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படியும். 25.02.2022 அன்று இத்துறை ஆணையர் நேரடியாக திருக்கோயிலை ஆய்வு செய்து வழங்கிய வழிகாட்டுதலின்படியும் பக்தர்கள் தரிசனம் முடித்து உடனடியாக வெளியில் செல்ல விரும்பினால், தொன்டைமான் மேடு வாசல் வழியாகவும். 

இரண்டாம் பிரகாரம் வலம் வர விரும்புகிறவர்கள் கிளி மண்டத்தில் ஏறி விமானத்தையும், சேரகுலவல்லி நாச்சியாரையும், பீபி நாச்சியார்.

பரவாசு தேவர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்து நாழிகேட்டான் வழியாகவும் வெளியில் செல்லும் வகையிலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் இரண்டாம் பிரகாரத்தில் பிரதட்சணமாக வலம் வர உரிய வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO