புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களிடம் உங்களின்  எதிர்பார்ப்பு என்ன?

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களிடம் உங்களின் எதிர்பார்ப்பு என்ன? 

இக்கேள்விக்கான கருத்துகளை மக்களிடம் திருச்சி விஷன் குழு கேட்டறிந்தது மக்களின் கருத்துக்கள் பின்வருமாறு.

தங்கவேல் 

வார்டு என்19 கவுன்சிலர் சாதிக்பாஷா (திமுக)திருச்சியின் மைய பகுதியான பெரியகடை வீதி மற்றும் ஜாபர்ஷா தெரு சந்துகடை பகுதியை உள்ளடக்கியது. இதில் சந்துகடை பகுதியில் சாலை மிக மிக மோசமாக உள்ளது மற்றும் ஜாபர்ஷா தெருவில் போக்குவரத்து மிக மிக நெரிசல் அதிகமாக உள்ளது .

அத்தியாவசிய தேவை தற்போது நல்ல சாலை மற்றும் வாகன நிறுத்தும் இடம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தருவார் என நம்புகிறோம் என்கிறார்.

முகமது இஸ்மாயில்

என்னுடைய வார்டில்(29)(கவுன்சிலர் 

கமால் முஸ்தபா ) உய்யக்கொண்டான் ஆற்றில் ஓடும் சாக்கடைகளை நிறுத்தி விட்டு நன்னீரை ஆற்றல் மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் படகு சவாரி மற்றும் ஆற்றங்கரையை பலப்படுத்துவது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இதை இங்கு செய்தாலே எங்களுடைய வார்டில் பெரும் பிரச்சனைகளும் தீரும்,நிறைய மாற்றங்களும் வரும்.

எங்களுடைய வார்டில் சாலை போடும் போது சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கினாலும் மக்களுக்கு அது பின்பு பெரிய பலன் அளிக்கும்.மற்றும் தற்போது புதிதாக போட்டுக் கொண்டிருக்கின்ற சாலைகளையும் புதிதாக போட்ட சாலைகளிலும் சாலையோரத்தில் இடம் ஒதுக்கி ஒரு தெருவிற்கு குறைந்தது 25 முதல் ஐம்பது மரம் வரையிலான மரக்கன்று நட்டால் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

சாலை போடும் போது பெரிதாக இருக்கிறது அது ஒரு மாதங்களிலோ அல்லது ஓரிரு மாதங்களிலிலோ சிறியதாக மாறிவிடுகின்றது எனவே சாலை ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் இந்த வார்டில் உள்ள மக்களுக்கு மிகவும் பயனளிக்கும், ஏனெனில் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது அதிகமாகின்றது.

தெருவில் முக்கியமான இடங்களில் சிசிடிவி(CCTV) பொருத்தலாம் என்கிறார் முகமது இஸ்மாயில்.

கோபாலகிருஷ்ணன்

எனது வார்டு 21 (மும்தாஜ் பேகம்)பகுதியில் நல்ல சாலை அமைக்க வேண்டும் நல்ல குடிநீர் அமைக்க வேண்டும் மற்றும் தெருவிற்கு ஒன்றாக  குப்பைத் தொட்டி அமைக்க வேண்டும்.

முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மற்றும் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் அமைத்து தர வேண்டும் மற்றும் மாதமொருமுறை மருத்துவ முகாம் அமைத்து தரவேண்டும் என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

ஜஹாங்கீர்

30.வது வார்டு (கவுன்சிலர் கதீஜா)மாமன்ற உறுப்பினர்தன்னிச்சையாக செயல்படவேண்டும் மாமன்றத்தில் வாதிட்டு வார்டு நலம் பேண வேண்டும் வாரம் ஒருமுறையாவது பகுதி வலம் வந்து மக்களே நேரில் சந்தித்து குறைகளை களைய வேண்டும்எந்த காரணத்தைக் கொண்டும் அவரைத்தவிர வேறு யாரும் அவரது பணிகளை மேற்கொள்ளக்கூடாது 

மாநகராட்சியில் அறிவிக்கப்படும் நலத்திட்ட சுற்றறிக்கையை வாடஸ்அப் மூலம் வார்டு மக்களறிய circulate செய்ய வேண்டும்  

கஞ்சா மது மாத்திரை போதை அடிமை இளைஞர்களை சந்தித்து நல் வழி படுத்த வேண்டும்  முதியோர் உதவித்தொகை ரேஷன்கார்டு வருமான சாதி சான்றிதழ்களை தானே நேரில் எந்த புரோக்கருமில்லாமல் பெற்றுத்தர வேண்டும் 

திருச்சி மாநகர மேம்பாட்டிற்காக உலக வங்கி மற்றும் அரசு வழங்கிய நிதி ஒதுக்கீடு செய்தது அதில் மேற்கொண்ட நலப்பணிகள் செலவின வெள்ளை அறிக்கை மாதமொரு முறை வாக்களித்த மக்கள் அறிய பத்திரிகை செய்தி வெளியிட வேண்டும் போன்றவற்றை செய்வார் என எதிர்பார்க்கிறோம் என்கிறார் ஜஹாங்கீர்.

முகமது ஷேக்

 வார்டு எண் 7 (கவுன்சிலர்- ராதா)தீராத பிரச்சினையாக இருப்பது பாதாள சாக்கடை பிரச்சனை தான் பலமுறை புகார் அளித்தும் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதால் கொசுத்தொல்லை ஏற்பட்டு நோய் வருவதற்கான  அபாயம் இருக்கின்றது அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.பின்னர் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் போன்றவற்றை முதலில் சரி செய்து அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்கிறார் முகமது ஷேக்.

 முகமது அனிபா

வார்டு எண் 29 (கமால்முஸ்தபா)பொருத்தவரையில் உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினை என்றால் இங்கு தெருக்களில் நாய்கள் அதிகமாக உள்ளதால் வெறிபிடித்து ரோட்டில் செல்பவர்களை கடித்து தொந்தரவு செய்கின்றன எனவே அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மழைக்காலங்களில் மழை தண்ணீர் வீட்டிற்குள்ளேயே புகும் அளவிற்கு இருப்பதற்கான காரணம் சாக்கடைகள் தூர்வராமல் இருப்பதே அதையும் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,தண்டவாளங்கள் அருகே சில சமூக விரோதிகள் தினமும் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர் இதனால் அப்பகுதியில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்கிறார் முகமது அனிபா

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO