திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் மழைநீர் தேங்கி உள்ளதால்விபத்து மற்றும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் மழைநீர் தேங்கி உள்ளதால்விபத்து மற்றும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் வணிகவரி அலுவலகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிரமான அலகு நிலையம், சார்நிலைக் கருவூலம் ஆகிய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 

இந்த அரசு அலுவலகங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலுவலர்கள் அரசுப் பணி செய்து வருகின்றனர். 

தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மழை நீர் வெளியேற வழி இல்லாததால் இந்த அலுவலகங்களுக்குச் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சகதியில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

 அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அலுவலகங்களுக்கு முன்னால் தண்ணீர் தேங்கி உள்ளதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் பொது மக்கள் ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க வருபவர்கள் இந்த சாலையில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளதாலும், மாற்றுத் திறனாளிகளின் வாகனங்கள் சேற்றில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளதாலும் சாலையை செப்பனிட்டு சாலையில் செல்லும் அளவில் தகுந்தவாறு சாலை அமைக்கவும் மின் பகிர்மான அலகில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதன் மூலம் விபத்து ஏற்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn