திருச்சி விஷன் செய்தி எதிரொலி - சாக்கடை நீர் வெளியேறிய குழாயை உடனடியாக சரிசெய்த மாநகராட்சி ஊழியர்கள்

திருச்சி விஷன் செய்தி எதிரொலி - சாக்கடை நீர் வெளியேறிய குழாயை உடனடியாக சரிசெய்த மாநகராட்சி ஊழியர்கள்

திருச்சி தில்லை நகர் 4வது குறுக்கு தெருவில் பாதாள சாக்கடை நீர் வெளியேறுவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் அபாய சூழலில் இருந்து வந்தது.

குறிப்பாக மழைக்காலங்களில் இந்த பாதாள சாக்கடை நீர் ஓடும் மழை நீரும் கலந்து அப்பகுதியில் உள்ள அலுவலகம் மற்றும் வீடுகளின் தரைதளங்கள் முழுவதும் சாக்கடை நீரால் சூழப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக மாநகராட்சியிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழலில் மக்கள் வைத்த கோரிக்கை மூலம் திருச்சி விஷன்  கடந்த திங்கள் அன்று முகநூல் பக்கத்தில் நேரலை செய்தவுடன் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அதன் பின் சாக்கடை நீர் வெளியேறிய குழியை தற்போது மூடியுள்ளனர். அங்கு சாக்கடைநீர் வெளியேறுவதில்லை இதனால் அப்பகுதி மக்கள் சாலையை எவ்வித அச்சமுமின்றி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/Trichyvision