மக்களை துரத்தி கடிக்கும் நாய்கள் - மாநகராட்சி பிடிக்குமா?

திருச்சி மாநகராட்சி 39வது வார்டுக்குட்பட்டது பாலாஜி நகர். திருவெறும்பூர் பகுதியில் உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனம், பாதுகாப்பு துறை நிறுவனங்களான எச்இபிஎப், துப்பாக்கி தொழிற்சாலை, என் ஐ டி, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வேலைக்கு செல்வதற்கு ஏதுவாக இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வதற்காக இரவு நேரங்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் தெருநாய்கள் அளவுக்கு அதிகமாக தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் அப்பகுதியில் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கிறது.
மேலும் வாகன ஓட்டிகளும் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக பாலாஜி நகர் பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision