புத்தூர் குழுமாயி குட்டிக்குடி திருவிழாவை முன்னிட்டு சாலைகளை சீரமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

புத்தூர் குழுமாயி குட்டிக்குடி  திருவிழாவை  முன்னிட்டு சாலைகளை சீரமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்  கோரிக்கை

திருச்சி புத்தூர் குழுமாயி மற்றும் உறையூர் குழுந்தலாயி அம்மன் குட்டிகுடி திருவிழா மார்ச் 7ந் தேதி தொடங்கி 12ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். பாதாளசாக்கடை பணிகள் நிறைவுற்று மூடப்பட்ட பள்ளங்கள் உள்ள புத்துார் அக்ரஹாரம் முதல் உறையூர் மார்க்கெட் வரை உள்ள பிரதான சாலை மற்றும் உறையூர் வாலாஜா சாலையினை போக்குவரத்து மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கிரஷர் மண் கொட்டி பேவர் இயந்திரம் மூலம் (Road Roller) சமன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அதேபோல உறையூர் குழுந்தலாயி அம்மன் திருவிழா நடைபெறும், அம்மன் உலாவரும் 23வது வார்டு தெருக்கள் மற்றும் புத்தூர் குழுமாயி அம்மன் உலா வரும் 23வது வார்டு மற்றும் 24வது வார்டு தெருக்களில் பாதாள சாக்கடை பணி முடிந்து தோண்டப்பட்ட பள்ளங்களை கிரஷர் மண் கொண்டு சமன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

முக்கியமான சாலை மற்றும் தெருக்களின் சந்திப்புகளில் மின் கம்பங்களில் எரியாத மின் விளக்குகளை ஒளிரச் செய்திடவும், குறிப்பிட்ட சந்திப்புகளில் கூடுதல் Power மின்விளக்குகள் பொருத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இக்கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் சத்தியா, இப்ராஹிம் கிளை செயலாளர் முருகன் சுரேஷ் முத்துசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO