தேசிய அறிவியல் தினம் - சர்.சி.வி.ராமனின் முகமூடிகள் அணிந்து மாணவ, மாணவிகள் பேரணி
சர். சி.வி.இராமன் என்றழைக்கப்படும், சந்திரசேகர வெங்கடராமன், கடந்த, 1888ம் ஆண்டு, நவம்பர், 7ம் தேதி ஆம் நாள், திருச்சி ஸ்ரீரங்கம் அருகே திருவானைக்காவலில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுவதும் படித்து, இயற்பியல் விஞ்ஞானியான இவர், ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு "இராமன் விளைவு" (Raman Effect) என்று பெயர் வைத்தார்.
கடலும், வானும் நீலமாக இருப்பதற்கு ராமன் விளைவே காரணம். இக்கண்டுபிடிப்பு இன்று, பொருள்களின் பல விதமான பண்புகளை, அப்பொருளுக்கு கேடு ஏதும் நேராமல் கண்டறிய மிகவும் பயனுடையதாக உள்ளது. இக்கண்டுபிடிப்புக்காக, இந்தியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார். அவர், "ராமன் விளைவு" கண்டறிந்த நாளான இன்று தேசிய அறிவியல் தினமான கொண்டாடப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்டம் செயல்படுத்தப்படும், 1000 மையங்களில் இன்று தேசிய அறிவியல் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, சர். சி.வி. ராமன் பிறந்த திருவானைக்காவல் கொண்டயம்பேட்டை நேருஜி நடுநிலைப்பள்ளியில் இருந்து, 93 மாணவ, மாணவிகள், சர்.சி.வி. ராமனின் முகமூடிகள் அணிந்து அவர் ஓடியாடி விளையாடிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோஷங்கள் எழுப்பியபடியே வந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO