குறுங்கோள்களை கண்டறிந்த அரசு பள்ளி  5மாணவர்கள்

குறுங்கோள்களை கண்டறிந்த அரசு பள்ளி  5மாணவர்கள்
சுதந்திர இந்தியாவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின்கீழ் இயங்கும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு வானியல் மையம் மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து கடந்த 22 முதல் முதல், 28ம் தேதி வரை, அறிவியல் வார விழாவை கொண்டாடி வருகின்றன.
தமிழகத்தில் 5கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அறிவியல் வாரவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகிறது. அதில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தேசிய அறிவியல் வாரவிழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு அறிவியல் திறன்போட்டிகள், கருத்தரங்கம், பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டுவந்தன.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு குறுங்கோள்கள் கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக ஜனவரி 28 முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை இதற்கான பயிற்சி நடைபெற்றது.
 இதில்  ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து 21 குழுக்கள் கலந்து கொண்டனர்.
 அதில்  தமிழ்நாட்டிலிருந்து 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர் ஒவ்வொரு குழுவிற்கும் 5 மாணவர்கள் என்று  50 கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து இதில் பங்கேற்றனர்.
பயிற்சியில் ஒட்டு மொத்தமாக 200 மாணவர்கள் கலந்து கொண்டனர் அதில் சிறப்பாக செயல்படும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிறப்பம்சம் யாதெனில்  அரசு பள்ளியை சேர்ந்த ஐந்து மாணவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
 பூமி மீது குறுங்கோள்கள் மோதுவதை தடுப்பதற்காக அது குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்றும் பல விஞ்ஞானிகள்  குறுங்கோள் குறித்து இந்த ஆராய்ச்சியில் மாணவர்களோடு இணைந்து செயல்பட்டனர்.இவர்கள் கண்டறிந்த 24  குறுங்கோள்கள்  நாசா அங்கீகாரம்  அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

இராமன் விளைவைக் கண்டறிந்த இன்றையதினம்(28.02.2022) தேசிய அறிவியல் நாளாக கொண்டாடப்பட்டு வரும்பட்சத்தில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள் மற்றும் தேசிய அறிவியல் வாரவிழா நிறைவு நாள் பிஷப்ஹீபர் கல்லூரி முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான பால் தயாபரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. 
வளர்ந்துவரும் நாட்டிற்கு அறிவியலும், தொழில்நுட்பமும் அவசியமாகிறது எனவே மாணவ, மாணவிகளுக்கு அறிவியலின் ஆக்கம் மற்றும் பயன்பாடு குறித்து அறிவியல் அறிஞர்கள் பங்கேற்று விளக்கினர். தொடர்ந்து தேசிய அறிவியல் வாரவிழாவையொட்டி திருச்சி மண்டல பள்ளி, கல்லூரி மாணர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செந்தில்குமார் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். மேலும் தமிழ்நாடு வானியல் மையத்துடன் இணைந்து செயல்படும் திருச்சி அஸ்ட்ரோ கிளப் மூலமாக புதிதாக 21குறுங்கோள்களை கண்டறிந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO