சமயபுரம் கோவில் கலசங்கள் திருவீதி விழா

சமயபுரம் கோவில் கலசங்கள் திருவீதி விழா

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரத்துக்கு வருகிற ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ராஜகோபுரத்திற்கு மேல் வைக்கப்படும் கலசங்கள் நாமக்கல் மாவட்டம் நஞ்சை இடையார் பொன்னர் சங்கர் சகோதரர்களால் கும்பகோணத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்த கலசங்கள் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் மற்றும் உன்னியூர் பெரியப் பள்ளிபாளையம் சின்னப் பள்ளிபாளையம் ஸ்ரீ ராம சமுத்திரம் பகுதிகளில் திருவீதி உலா வந்தது. இந்த கோபுர கலசங்களை காட்டுப்புத்தூர் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில்களில் வைத்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய....... https://t.co/nepIqeLanO