சனாதான தர்மம் அனைவருக்கும் கல்வி என்பதை மறுத்து உயர் சாதியினருக்கு மட்டுமே கல்வி என கூறியது -திருச்சியில் சபாநாயகர் பேச்சு

சனாதான தர்மம் அனைவருக்கும் கல்வி என்பதை மறுத்து உயர் சாதியினருக்கு மட்டுமே கல்வி என கூறியது -திருச்சியில் சபாநாயகர் பேச்சு

திருச்சியில் செயல்பட்டு வரும்தூய பவுல் குருத்துவ கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு சட்ட மன்றத்திம் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, 

இந்தியாவில் தமிழ்நாடு கல்வியில் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள்.அவர்கள் இல்லையென்றால் பீகார் போல் தமிழ்நாடு இருந்திருக்கும்.நம் இந்தியா நூறாண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்தது என எண்ணிப்பார்க்க வேண்டும்.

சனாதான தர்மம் தான் இந்த நாட்டை மேலோங்க செய்தது என இன்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் பெயரை நான் கூற விரும்பவில்லை.கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றோர்கள் சமஸ்கிருதம் படித்தவர்கள் அவர்களுக்கு சனாதான தர்மம் குறித்து நன்றாக தெரியும். ஜாதி படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருப்பர்களுக்கு மட்டும் தான் கல்வி என்று சனாதன தர்மம் கூறுகிறது. அவர்கள் மட்டும் தான் கல்வி கற்று கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது.

அந்த நிலையிலிருந்து எப்படி வெளியேறினோம், யார் நம்மை வெளியே நம்மை கொண்டு வந்தார்கள் என்பதை குறித்து சிந்திக்க வேண்டும்.பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டங்களால் அனைவருக்கும் கல்வி கிடைத்தது.

தமிழுக்கு தொண்டாற்றிய கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றவர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா.அப்பாவுவாகிய நான் இந்த நிலைக்கு உயர காரணம் கத்தோலிக்க திருச்சபையினர் தான்.திருச்சபைகள் மதங்களை திணிக்க வரவில்லை. ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும் என தான் கூறுவார்கள்.

கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வரும் நிதிகள் தவறான பாதையில் செலவழிக்கப்படுவதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் அந்த நிதிகள் ஒருபோதும் நாட்டுக்கெதிராக செலவழிக்கப்படுவதில்லை மாறாக ஏழை எளிய மக்களுக்கு தான் செலவழிப்பார்கள்.கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அனைத்து மதத்தினவரும் கல்வி கற்று உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்.இந்த அரசு நீங்கள் விரும்பி, பிராத்தித்து கொண்டு வந்தது. இது உங்களுக்கான அரசு, சாமானிய மக்களுக்கான அரசு. 

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பல பிரச்சனைகள் உள்ளது இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சட்டமன்றத்தில் பேசினார். கத்தோலிக்க கிறிஸ்துவ ஆயர்களும் முதலமைச்சரை நேரடியாக சந்தித்து உங்கள் கோரிக்கைகளை கூறி உங்களின் உரிமைகளை கேட்டு பெருங்கள். முதலமைச்சர் நிச்சயம் செய்து கொடுப்பார். கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ஜாதி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் கல்வி கொடுத்த காரணத்தால் தான் கல்வியில் தமிழ்நாடு உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கத்தோலிக்க கிறிஸ்துவ பேராயர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO