திருச்சியில் தபால் நிலையங்களில் சேவை பாதிப்பு

திருச்சியில் தபால் நிலையங்களில் சேவை பாதிப்பு

அஞ்சல் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கை உடனே நிறுத்த வேண்டும். துரித அஞ்சல் காகிதங்கள் மற்றும் பார்சல் டெலிவரி செய்வதற்கான நோடல் டெலிவரி மையங்கள் சென்ட்ரல் டெலிவரி மையங்களை உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் நிலைய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி தலைமை தபால் நிலையத்தின் முன்பாக ஊழியர்கள் முன்னதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அஞ்சல் துறை திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அரியலூர், திருச்சி பகுதியில் 102 தபால் நிலையங்கள் உள்ளன. அதில் 70% தபால் நிலையங்களில் பொதுமக்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தபால் ஊழியர்கள் யாரும் இன்று தபால்களை பட்டுவாடா செய்யும் பணியில் ஈடுபடவில்லை. முதலில் இது ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அடுத்ததாக காலை வரையற்ற பேராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை செவி சாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போராட்டமானது 24 மணி நேரம் நடைபெறுவதால் நாளை பொதுமக்கள் சேவை தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO