ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை
தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு எண் 24ன்படி இதர மாநிலங்களில் உள்ள திருக்கோயில்களுக்கும், தமிழக திருக்கோயில் களிலிருந்து வஸ்திர மரியாதை வழங்கிட அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருமலா திருப்பதி திருக்கோயிலுக்கு இத்திருக்கோயிலிலிருந்து வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் உறவு மேம்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வஸ்திர மரியாதை மற்றும் பகுமானம் எனப்பபடும் சீர்பொருட்கள் உள்ளிட்டவை ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் மூல பிருந்தாவனமான "மந்த்ராலயத்தில்" வருகிற 12.08.2022 தேதியன்றுவழங்கப்படுகிறது.
மேற்படி மடத்தின் வேண்டுகோளினை ஏற்றும். மேற்படி வஸ்திர மரியாதை வழங்குவது குறித்தும், இத்திருக்கோயிலின் தலைமை அர்ச்சகரின் கருத்துரு கேட்கப்பட்டு, இத்திருக்கோயிலின் தலைமை அர்ச்சகரின் கருத்துருவின்படியும் தக்கார் தீர்மானம் இயற்றப்பட்டது. அதனையடுத்து இத்திருக்கோயில் நிர்வாகத்தினர் ஸ்ரீராவேந்திர ஸ்வாமிகளின் மூலபிருந்தாவனத்திற்கு 12.08.2022தேதி வழங்குவதற்கான வஸ்திரம் மற்றும் பகுமானம் எனப்படும் சீர்பொருட்கள் உள்ளிட்டவற்றை இன்று காலை 10.00 மணி அளவில் இத்திருக்கோயிலிருந்து முறைப்படி எடுத்துச்சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO