திருச்சி விஷன் செய்தி எதிரொலி - சேதமடைந்த மின் கம்பம் மாற்றம்
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர் 11வது வார்டு வாத்துக்காரத் தெருவில் பிப்ரவரி 5 ஆம் தேதி மதியம் இந்த தெருவில் உள்ள மின்கம்பம் மீது ஒரு லாரி மோதியதால் அந்த மின் கம்பம் பலத்த சேதமடைந்துவிட்டது. அன்று உடனே மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேரில் வந்து பார்வையிட்டு மின்கம்பத்தை சேதப்படுத்திய லாரி ஓட்டுனரிடம் முறையான அபராதம் பெற்று கொண்டனர்.
அடுத்த நாளே வந்து வேற மின்கம்பம் மாற்றி தருவதாக அங்கிருக்கும் பொது மக்களிடம் மின்வாரிய பணியாளர்கள் தகவல் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் 6 நாள் ஆகியும் மின்கம்பத்தை மாற்றாமல் அப்படியே அதே நிலையில் தான் உள்ளது. ஆனால் அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் அங்கிருக்கும் பொதுமக்கள் மின்வாரியத்திற்க்கு தொலைபேசியில் அழைத்து இது சம்மந்தமாக புகார் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தான் வந்து அதை மாற்ற முடியும் என்று பேச்சை முடித்து கொள்கிறார்கள்.
அந்த பகுதியில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அதிகமாக நடமாடுகிறார்கள். ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன் அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி விஷன் கடந்த 11ஆம் தேதி செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு மின்சார வாரியம் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றியுள்ளனர். பொது நலன் கருதி மின்சார வாரியத்தவாரியத்திற்கு கவனத்திற்கு எடுத்துச் சென்ற இந்து முன்னணி மற்றும் திருச்சி விஷன் செய்தி நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision