சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியிடம் ரூ.4.60 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியிடம் ரூ.4.60 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் இன்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி 94.5 கிராம் எடை கொண்ட தங்கத்தை டூல்ஸ் கிட்டில் மறைத்து வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.4,59,837  என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn