திருச்சி டி.ஆர்.ஓவுக்கு கோவிட் தொற்று உறுதி - ஆட்சியர் அலுவலர்கள் பரிசோதனை
திருச்சியில் தொடர்ந்து கோவிட் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
மக்கள் அதை கவனத்தில் கொள்ளாமல் சந்தைகள் மற்றும் கடைவீதிகளில் முகக் கவசங்கள் அணியாமல் தனிமனிதர்களை கடைபிடிக்காமல் உள்ளனர். தற்போது திருச்சியில் 400க்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அலுவலர்கள் கோவிட் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமாருக்கு மட்டும் கோவிட் தொற்று உறுதியாகிய நிலையில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn