பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப கொடுக்கும் போலீசார். வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப கொடுக்கும் போலீசார். வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

கொரோனா தொற்று 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி இன்று வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கில் திருச்சி மாநகரில் தேவையில்லாமல் ஊர் சுற்றியதாக 6566 இருசக்கர வாகனங்கள், 195 ஆட்டோ மற்றும் 73 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 6916 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைத்தனர்.

இதற்கிடையில் அதிக வெப்பம் காரணமாக இந்த வாகனங்களின் பாதுகாப்பு கருதி தினமும் வஜ்ரா போலீஸ் வாகனம் மூலம் தண்ணீர் தௌிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இன்று முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று காலை கடந்த மே மாதம் 15ம் தேதி முதல் 18-ம் தேதி வரை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 300 இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்களிடம் போலீசார் ஒப்படைக்கும் பணி துவங்கியது.

வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பெற்று செல்ல திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் குவிந்தனர். பின்னர் லைசன்ஸ், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகிய ஆவணங்களை சரிபார்த்து வாகன உரிமையாளரிடம் வாகனங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve