திருச்சி விமான நிலையத்தில் 1.26 கோடி மதிப்பிலான 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!!

திருச்சி விமான நிலையத்தில் 1.26 கோடி மதிப்பிலான 2.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!!

Advertisement

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானத்தில் வியாபாரிகளாக பலர் வெளிநாடு சென்று வருகின்றனர் இவ்வாறு வரும் வியாபாரிகள் தங்கள் உடல் உடமைகள் உள்ளிட்டவைகளில் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

Advertisement

இதனை தடுப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவர் தனது உடலில் 799 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 39,99,974 என தெரியவருகிறது

Advertisement


இதே போன்று நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து நேற்று சிறப்பு மீட்பு விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த சுகுமார் (28) திருவாரூரைச் சேர்ந்த அகமது அலி(32) ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரஹ்மதுல்லாஹ் (43) ஆகிய மூன்று பயணிகளிடம் இருந்து ரூபாய் 1.26 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட மூவரும் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.