திருச்சியில் ஆயிரக்கணக்கான திமுகவினர் ஒரே இடத்தில் குவிந்து அமைச்சரிடம் விருப்ப மனுக்களை கொடுக்க முயற்சி பரபரப்பு
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று மத்திய மற்றும் வடக்கு பகுதிகளை சேர்ந்த திமுகவினரிடம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. முன்னதாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் அறிவலாயத்தில் குவிந்தனர். தங்களது விருப்ப மனுக்களை அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் கொடுக்க வந்திருந்தனர்.
அதன் பிறகு திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவிடம் விருப்ப மனுக்களை கொடுத்தனர். கலைஞர் அறிவாலயத்தில் உள்ளே நுழைந்ததில் இருந்து ஏராளமான திமுகவினர் அவரை சூழ்ந்து கொண்டனர்.
ஒரு கட்டத்தில் திமுகவினர் அவர் காலில் விழுந்து வணங்க தொடங்கிவிட்டனர். பிறகு பத்திரிக்கையாளர் புகைப்பட கலைஞர்களுக்காக ஒரு சிலரிடம் விருப்ப மனுக்களை வாங்கிவிட்டு கூட்டம் அதிகமாகி உள்ளதால் அங்கிருந்து பத்து நிமிடத்தில் புறப்பட்டு சென்று விட்டார். கோவிட் அதிகரித்து வரும் நிலையில் திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் ஒரே பகுதியில் தனிமனித இடைவெளி இல்லாமல் கூடியிருந்தது கொரோனா பரவல் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் நிலவியது. மேலும் வந்திருந்த திமுகவினர் பெரும்பாலோனர் முகத்தில் முககவசம் என்பதே இல்லை. பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் அரசு அக்கட்சியின் தொண்டர்களுக்கும் முக கவசத்தை அணிய வலியுறுத்த வேண்டும் என குரல் ஒலித்தது.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn