மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை பெற்ற  காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை பெற்ற  காவல் ஆளினர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநில
அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை, ஒட்டிவாக்கத்தில் 04.01.22 முதல் 
06.01.22 வரை நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் சுமார் 300 நபர்கள் Pistol, Carbine மற்றும் INSAS சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி மத்திய மண்டலம் அணி சார்பில் திருச்சி மாநகர காவல்துறையை சேர்ந்த காவல் உதவி ஆணையர், கண்டோன்மெண்ட் சரகம் அஜய்தங்கம் உட்பட காவல் ஆளிநர்கள் 10 நபர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர். 3 தங்கம் பதக்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் திருச்சி மண்டல அணி மொத்தம் 11 பதக்கங்கள் வென்றனர். மேலும் இப்போட்டியில் Revovlver - 40 Yards சுடும்போட்டியில் கலந்து கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க பிரிவு சிறப்பு உதவி 
ஆய்வாளர் திருஞானசம்பந்தம் ஒரு தங்கப்பதக்கமும்,

எடமலைபட்டிபுதூர் காவல்நிலையம் முதல்நிலை காவலர் பரமசிவம் Snap Shot - 300 Yards சுடும்போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றனர். இப்போட்டியில் திருச்சி மாநகர காவல் சார்பாக கலந்து கொண்ட பதக்கம் வென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் திருஞானசம்பந்தம் மற்றும் முதல்நிலை 
காவலர் பரமசிவம் ஆகியோரை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாரட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn